×

தரமான மின் விளக்கு அமைக்க கோரிக்கை

 

கீழக்கரை, ஜூலை 4: கீழக்கரை நகர் விரிவாக்க பகுதிகளில் மின்விளக்கு அமைக்கப்படும் என நகர்ப்புற தேர்தல் வாக்குறுதிப்படி, ரூ.1 கோடி மதிப்பில் மின் விளக்குகள் கீழக்கரை நகராட்சிக்கு வந்துள்ளது. 3 குழு ஆய்வுக்கு பின் மின் விளக்குகள் நகர் முழுவதும் பொருத்தப்படும் என கூறப்படுகிறது. மேலும் தாமதிக்காமல் நகராட்சியை இருள் சூழ வைக்காமல், மின் ஒளி மிகுந்த நகராக திகழ நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.மேலும், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் நிறுவிய உயர் கோபுர மின் விளக்குகள் பல இடங்களில் ஒளி தராமல் இருள் சூழ்ந்துள்ளது. தரம் மிகுந்த மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post தரமான மின் விளக்கு அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Urban Election Promise ,Dinakaran ,
× RELATED உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலை...